Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சாய் சத்சரிதம் - அத்தியாயம் ஒன்று.

Sai saritham chapter 01 in tamil

சாய் சரிதம் - அத்தியாயம் 01


சத்குரு ஷிர்டி சாய்பாபா புகைப்படம்
சாய் சரிதம் - அறிமுகம்

சாய் சரிதம் அத்தியாயம் 01 கதை சுருக்கம். ஷிர்டி சாய்பாபா கருணை உள்ளம் கொண்ட மஹான். அவர் ஷிர்டி கிராமம் வந்த காரணம் தனது குருவின் மீது அவருக்கு இருந்த பக்தி. தனது குருவின் சமாதி ஷீரடியில் இருப்பதால் அதனை காண அங்கு வந்தார். அங்கு வந்த பிறகு மீண்டும் எங்கும் செல்ல மனம் இல்லாமல் அங்கேயே தங்கினார். தனது குரு சமாதி அருகில் உள்ள மரத்தடியில் தங்கி விட்டார். ஷிர்டி மக்களும் அவரை பார்த்து அவரின் மருத்துவ குணங்களின் சக்தி அறிந்து அவரை ஏற்று கொண்டனர். சாய் பாபா ஷிர்டி கிராமத்திற்கு இளம் வயதில் வந்தார். சாய் பாபாவின் பெற்றோர் யார் எங்கு பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரின் உயர்ந்த குணங்கள் மற்றும் சேவை எண்ணம் எல்லோரையும் கவர்ந்தது.

சாய் சரிதம் எழுதிய திரு ஹேமத் பந்த் அவர்கள் சாய் பாபாவின் தீவிர பக்தர். அவருக்கு பாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதும் எண்ணம் வந்த போது அதற்கு தான் தகுதியானவரா என்று நினைத்தார். அப்போது தன் நண்பரிடம் பாபாவின் அனுமதி பெற்று தரும்படி கேட்டார். அதை கேட்ட அவரின் நண்பர் மகிழ்ச்சி அடைந்தார். அவரின் விருப்பத்தை பாபாவிடம் தெரிவித்தார். பாபா, தன் வாழ்க்கை வரலாரை தானே எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஹேமத் பந்த் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிவார். அதனால் அவருக்கு எழுத அனுமதி தந்து ஆசி வழங்கினார்.

பாபா அனுமதி கொடுத்தது ஹேமத் பந்த் மற்றும் அவரின் நண்பருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஹேமத் பந்த் அனைத்து கடவுளையும் நமஸ்காரம் செய்து சாய் சரிதம் எழுத தொடங்கினார். முதலில் பாபா நிகழ்த்திய அதிசயங்களை அவருடன் இருந்து பார்த்து ரசித்தார். அந்த அழகான நிகழ்வுகளை தொகுத்து நமக்கு வழங்கியது தான் சாய் சரிதம். சாய் பக்தர்கள் அனைவரும் சாய் சரிதம் பாராயணம் செய்வதால் அனைத்து கஷ்டங்களும் விலகி நிம்மதி கிடைப்பது உண்மை.

அத்தியாயம் ஒன்று கூறும் கதை, ஷிர்டியில் காலரா நோயின் தாக்கம் பரவி வரும் நிலையில், அந்த நோய் ஷீரடியில் மக்கள் எவரையும் தாக்கி விட கூடாது என்று சாய்பாபா கோதுமை மாவை அரைத்து அதை ஷிர்டி கிராம பெண்கள் சிலரிடம்  கொடுத்து ஊர் எல்லையில் கொட்டி விட்டு வர கூறினார். அதன் விளைவாக ஷீரடியில் காலரா நோய் பரவல்  முற்றிலும் நீங்கி, மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பிய நிகழ்வு தான் முதல் அத்தியாயத்தின் கதை சுருக்கம். 

அதன் விரிவான கதையை சாய்பாபாவுடன் வாழ்ந்த சாய்பாபாவின் பக்தர்  திரு. ஹெமத்பன்ட்  எழுதிய " சாய் சத்சரிதம் " புத்தகத்தில் கூறிய நிகழ்வை கீழே உள்ள கானொளியில் கேட்களாம். 

Youtube Video link

Click this link to watch and hear sai saritham

நன்றி. ஓம் சாய் ராம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்