Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சாய் சத்சரிதம் - அத்தியாயம் இரண்டு

சாய் சத்சரிதம் 02


இரண்டாவது அத்தியாயம்

 இரண்டாவது அத்தியாயத்தில், திரு ஹேமாத் பந்த் அவர்கள் ஒரு குருவின் தேவையை பற்றியும், அவர் இந்த புத்தகத்தை எதனால் எழுதினார் என்பது பற்றியும் நமக்கு அழகாக விளக்குகிறார். முதல் அத்தியாயத்தில் பாபா கோதுமை மாவு மூலமாக ஷிர்டியில் காலரா நோயை அகற்றிய அற்புத நிகழ்வை பார்த்தோம். அதே போல், இந்த அத்தியாயமும் பாபா நிகழ்த்திய ஒரு அற்புதம் தான்.

 

ஹேமத் பந்தின் நண்பரின் குழந்தை நிலை

ஹேமத் பந்த்திற்கு ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார். அந்த நண்பருக்கு ஒரு குழந்தை, அந்த குழந்தைக்கு உடல் நிலை செரி இல்லாமல் இருந்தது. உடல் நிலை சரி இல்லை என்றால், சாதாரண காய்ச்சல் இல்லை,  உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நண்பர் எல்லா மருத்துவரிடமும் அந்த குழந்தையை மருத்துவம் காட்டினார். ஆனால், ஒரு பலனும் இல்லை. அந்த குழந்தையின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இல்லை, அப்படி இருக்க, அந்த குழந்தையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று துடித்தார்.


Sai Sat Saritham chapter 02 - Youtube Link


குழந்தையை குருவிடம் அழைத்து செல்வது

ஒரு குருவிடம் அழைத்து செல்கிறார், அவருக்கென்று ஒரு குரு இருப்பாரே அவரிடம் அழைத்து செல்கிறார், அந்த குழந்தையின் நிலை மிக மோசமாக இருப்பது அறிந்து, இறைவனை பிரார்த்தனை செய்துக்கொள்வதாக ஆறுதல் கூறி, இந்த நண்பரை குரு அனுப்பிவிடுகிறார். நாளடைவில் அந்த குழந்தையின் நிலை மோசம் அடைகிறதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த நண்பரின் கவலை மேலும் அதிகரிக்கிறது. இதை பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து, நெருங்கிய நண்பன் என்பதால் குழந்தையின் நிலை குறித்து ஹேமத் பந்த்திடம் கூறுகிறார். இதை கேட்ட ஹேமத் பந்த், மருத்துவரிடம் தான் செரி செய்ய முடியவில்லை. குருவின் ஆலோசனையால்  அந்த குழத்தை செரி ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார். இதை கேட்ட நண்பர் கோபம் அடைந்து, குருவிடமும் கூறி பயன் எதுவும் இல்லை. அவர் ஆறுதல் மட்டும் கூறி அனுப்பியதாக கூற, ஹேமத் பந்தும் வருந்துகிறார். ஹேமத் பந்த் ஒரு ஆலோசனை கூறுகிறார். ஷீரடிக்கு வா என்னுடன் அங்கு ஒரு பாபா இருக்கிறார், அவர் உன் குழந்தையின் குறையை தீர்த்து குணப்படுத்திவிடுவார் என்று நம்பிக்கை தருகிறார். ஷிர்டி சென்றபோது பாபாவின் அற்புதங்களை பார்த்து விட்டு வந்தது குறித்தும், மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறித்தும் சொல்லி அழைக்கிறார். ஆனால் அந்த நண்பர் எந்த விதத்திலும் நம்பவில்லை, மருத்துவர்களால் குனபடுத்த முடியாத இந்த குழந்தையை எப்படி உன் பாபா மட்டும் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை இன்றி பேசுகிறார். இறைவனை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் கூறுகிறார். அப்போது ஹேமத் பந்த், எனக்காக இல்லாவிட்டாலும், உனக்காக இல்லாவிட்டாலும், குழந்தையின் நலன் வேண்டி அழைப்பதாக கூறுகிறார். அவரும் சம்மதிக்கிறார். கடைசி முயற்சியாக இதையும் செய்துவிடுவோம் என்று இருவரும் ஷிர்டி செல்கின்றனர்.

 

ஷிர்டி சென்று பாபாவை சந்திக்கும் நிகழ்வு

ஷிர்டி செல்லும் ரெயில் கிடைக்கிறது. ஆனால், அது மிக மிக பொறுமையாக செல்லும் ரெயில், அதில் வருத்ததோடு பயணம் செய்கின்றனர், அப்போது அங்கு திடீரென்று ஒரு பெரியவர் வருகிறார். அந்த பெரியவர் இவர்களிடம், நீங்கள் செல்ல இறுக்கும் ஸ்டேஷனில் இறங்கினால் ஷிர்டி செல்ல நேரம் ஆகும், அதனால், நான் கூறும் இடத்தில் இறங்கினால் மிக விரைவில் ஷிர்டி செல்ல முடியும் என்று ஒரு யோசனை கூறுகின்றார். அதை கேட்டு ஆச்சர்யம் அடைந்து, அவர்களும் அந்த முதியவர் கூறிய இடத்தில இறங்கி செல்ல ஷிர்டி மிக விரைவில் அடைகின்றனர். ஷீரடியில் பாபாவை சென்று சந்திக்கின்றனர்இவர்களுக்கு என்ன தேவை என்பதை சொல்வதற்கு முன் பாபாவே இவர்களின் வருகையின் காரணம் தெரிந்து நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும், கண்டிப்பாக உங்களின் குழந்தை குணம் அடையும் என்று ஆறுதல் கூறுகின்றார். இவர்களுக்கு இதை கேட்டு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பாபாவிடம் எதுவும் கூறாமலே பாபாவிற்க்கு தெரிந்துள்ளது என்றால் பாபாவிற்கு எதோ ஒரு சக்தி உள்ளதை இருவரும் உணர முடிந்தது. உன் குழதையை காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது, என்று பாபா ஆறுதல் கூறி அனுப்புகிறார். அவர்கள் இருவரும் அங்கிருந்து புரப்படுகின்றனர். அப்போது அவர்கள் செல்லும் பாதை குறித்து பாபா கேட்கிறார். அவர்கள் காட்டு வழியாக செல்கிறோம், வேறு வழி இல்லை என்கின்றனர். காட்டு வழி செல்வது ஆபத்து என்பதால் பாபா அவர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. பாபா அருகில் அமர்ந்து இருந்த பக்தர் ஒருவர் உடனே பாபாவிடம்,  நானும் அந்த காடு வழி தான் செல்ல உள்ளேன், தினமும் செல்வதால் எனக்கு அந்த வழி மிக சுலபம் என்கிறார். பாபா அவரை நம்பி அவர்களை அனுப்புகிறார்.

 

நண்பரின் தவறை ஹேமத் பந்த் உணர செய்தல்

காட்டில் செல்லும் வழியில் ஹேமத் பந்த் கேட்கிறார், பாபாவை சந்தித்ததில் உனக்கு என்ன தோன்றுகிறது ?,  அதற்கு அந்த நண்பர், பாபா குழந்தையை காப்பாற்றிவிடுவார்,  பாபாவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி கூறுகிறார். ஹேமத் பந்த் அதற்கு, பாபா குழந்தையை காத்துவிடுவார் என்பது தெரியும், குருவின் அவசியம் புரியாமல் குருவை திட்டியது தவறு என்று அவர் தவறை உணர்த்தினார். காட்டு வழி செல்லும் ஆபத்து புரிந்து தன் பக்தரை நம் உடன் அனுப்பி வெய்தது. பாபாவிற்கு பக்தர்கள் மீதுள்ள அக்கறையை காட்டுகிறது என்று கூற, அந்த நண்பர் நிம்மதி அடைந்தார். சரியான பாதையில் செல்ல வழி நடத்தும் பாபா போல் ஒரு நல்ல குரு இருந்தால். நாம் எப்போதும் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இவர்கள் வீடு சென்ற பிறகு, குழந்தை இயல்பாக விளையாடி கொண்டு இறுப்பதை கண்டு மன நிறைவு அடைந்து, ஷிர்டி பாபாவை மனதில் நினைத்து, பாபாவிற்கு நன்றி கூறினர். மீண்டும், அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்...

 

ஓம் சாய் ராம், ஓம் நம சிவாய. நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்